அதிர்ச்சி செய்தி.. தனியார் காப்பகத்தில் 36 சிறுவர்கள் உள்பட 43 பேருக்கு கொரோனா உறுதி..!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 2:46 PM IST
Highlights

உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பாகத்தில் 7 ஊழியர்கள், சிறுமியர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பாகத்தில் 7 ஊழியர்கள், சிறுமியர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 76 சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த காப்பகத்தில் உள்ள 14 மற்றும் 15 வயது கொண்ட 4 சிறுமிகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களது பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில், 4 சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளும் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 

இதனிடையே, காப்பகத்தில் மீதமுள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 13 சிறுவர்கள், 23 சிறுமிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 43 பேரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மீதமுள்ள குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் காப்பத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!