போதைக்காக ஆசைப்பட்டு தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

By vinoth kumar  |  First Published May 27, 2021, 12:18 PM IST

போதைக்கு ஆசைப்பட்டு தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 


போதைக்கு ஆசைப்பட்டு தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குன்னவாக்கத்தை சேர்ந்தவர் பெயிண்டர் சங்கர்(40).  இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(50). டெய்லர் சிவசங்கர்(60), ஏலக்காய் மங்கலம் சுரேஷ்(40). இவர்களுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து 2 நாட்களாக குடித்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று காலை வழக்கம்போல் 4 பேரும் தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, தலைவலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஅனால், செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்துவிட்டார். மேலும், கிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையிலும், சிவசங்கர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!