அதிகாலையில் இருந்து நடக்கும் ஆகம பூஜைகள்.. இடைவிடாது ஒலிக்கும் வேத மந்திரங்கள் .. - நாகங்கள் புடைசூழ இரவில் அனந்தசரஸ் திருக்குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்

By Asianet Tamil  |  First Published Aug 17, 2019, 4:32 PM IST

48  நாட்கள் காட்சி தந்த அத்திவரதர் இன்று இரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட இருக்கிறார் . இதற்காக அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது .


1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். 48 நாட்கள் மட்டுமே இவர் காட்சி தருவதால் மூலவரான வரதராஜ பெருமாளுக்கு செய்யப்படும் நான்கு கால பூஜைகள் அத்திவரதருக்கு செய்யப்பட வில்லை . நிவேதனங்கள் படைக்கப்பட்டு தீபாராதனைகள் மட்டுமே காட்டப்பட்டது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவு பெறுகிறது . பொது தரிசனம் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்டு விட்டது . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் இன்று தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளம் சேர இருக்கிறார் .

இதற்காக இன்று அதிகாலையில் இருந்து அத்திவரதருக்கு ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன . பட்டாச்சாரியர்கள் இடைவிடாது வேத மந்திரங்களை முழங்கி வருகின்றனர் .அடுத்து 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் அத்திவரதர் வைக்கப்பட இருப்பதால் , சிலை சேதமடையாமல் இருப்பதற்காக சிறப்பு தைலங்கள் தயாரிக்கப்பட்டு சிலைக்கு பூசப் பட்டு வருகிறது .

இவை நிறைவுபெற்ற பிறகு இரவு 10 மணிக்கு மேல் அத்திவரதர் குளத்திற்குள் எடுத்து செல்லப்படுவார் .அங்கு அவரது மண்டபத்தின் கீழ் இருக்கும் அறையில் சயனக்கோலத்தில் வைக்கப்படுவார். தலைப்பகுதி ஒரு கருங்கல்லின் மேல் வைக்கப்பட்டு இருக்கும் . தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் ஒன்று வைக்கபட்டு , சிலையை சுற்றிலும் 16 நாக தேவதைகளின் சிலையும் வைக்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது .

எல்லாம் முடிந்த பிறகு கோவிலின் பொற்றாமரை குளத்தில் இருந்து தண்ணீர் அனந்தசரஸ் திருக்குளத்திற்கு மாற்றப்படும் . இந்த நிகழ்வின் போது பட்டாச்சாரியார்கள் , திருக்கோவில் ஊழியர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது .

அடுத்து 2059 இல் அத்திவரதர் வெளி வருவார் .
 

click me!