டாஸ்மாக் தொடர்பாக பகிரப்படும் பல குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்றும், டாஸ்மாக் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு களையப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழிக்க முதல்வர் ஆலோசனை வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் தொடாபக வரும் பல குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. அரசியல் லாபத்திற்காக ஒரு தவறை நூறாக பேசுகின்றனர். மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கவில்லை. இதில் பல பிச்சினைகள் உள்ளன. அவற்றை முழுமையாக ஆய்வு செய்து ஒழுங்கு படுத்தப்படும். உரிமம் பெற்ற பார்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்
டாஸ்மாக்கில் எந்தவித தவறும் நடைபெறவில்லை. தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இலக்குகள் ஏதும் நிர்ணயிக்கப்படுவது கிடையாது. தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அரசின் நேக்கம் என்று தெரிவித்துள்ளார்.
கொட்டும் மழையிலும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்