ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையிலிருந்த இளம் பெண் ஒருவர் கடுமையான ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மது மற்றும் கஞ்சா போதைக்கு ஏராளமானோர் அடிமையாகி வருவது சமுதாயத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், எப்போதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையில் இளம் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களுடைய மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்குலட்சுமி (வயது 35). இவரது முதல் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் அங்குலட்சுமிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அங்கு லட்சுமிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ள நிலையில் அவர் சிறு சிறு வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
ஆசையாக பிரியாணி கேட்ட தொழிலாளி; கூலாக பூரான் பிரியாணியை பார்சல் செய்த ஓட்டல் நிர்வாகம்
அவருடன் தொடர்பு கொண்டிருந்த இளைஞர் மூலமாக, அங்குலட்சுமிக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக தள்ளு வண்டியில் சோளக்கருது, (சோளம்) விற்கும் தொழில் செய்ய முடிவு செய்த அங்கு லட்சுமி இன்று இரவு 8 மணி அளவில், தான் வசிக்கும் குமாரபாளையத்திலிருந்து, ஈரோடு மரப்பாலம் பகுதிக்கு வந்தார்.
அப்போது தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு மது அருந்திவிட்டு, கஞ்சாவை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அளவுக்கு அதிகமான போதை தலைக்கேறியதால், மரப்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாநகரின் பிரதான மையப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பிற்கு வந்தார். வரும் வழியில் உள்ள சாலையில் சென்றவர்களிடம் ரகலையில் ஈடுபட்டதுடன், அரசு பேருந்தை வழிமறித்து நின்று சிறிது நேரம் ஆட்டம் போட்டு உள்ளார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் அங்குலட்சுமியிடம் சென்று விசாரித்தனர், அவ்வாறு விசாரித்த ஒருவருக்கு அங்குலட்சுமி தர்ம அடி கொடுத்துள்ளார். அப்போதுதான் அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்து. அவருக்கு உதவி செய்ய வந்தவர்கள் அனைவரும் விலகிச் சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு லட்சுமியை சமாதானப் படுத்த முயன்றனர்.
ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் அங்கு வருவோர் போவோரை எல்லாம் அடிக்கப் பாய்ந்தார், மேலும் அந்த வழியே சென்ற பேருந்து ஒன்றினை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்தார். சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் அங்கு லட்சுமியின் கைகளை பின்புறமாக அந்த லட்சுமியின் துப்பட்டாவால் கட்டி, ஆட்டோவில் ஏற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக் குழுவில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் அங்கு லட்சுமி குறித்த தகவலை கேட்பதற்காகவும் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதை பற்றியும் விசாரிப்பதற்காக முயற்சித்த போது, அங்கும் தரையில் உருண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார்,
இதனையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களும், காவல்துறையினரும் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போது "வரமாட்டேன்" எனக்கூறி தொடர் அலப்பறையில் ஈடுபட்டதால், மிகுந்த சிரமத்திற்கு பிறகு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது கை கால்களை கட்டினர், அங்குலட்சுமி தொடர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததால் வலுக்கட்டாயமாக அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது, இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி
ஆனால், அவரது குடும்பத்தினர் எவரும் அங்கு லட்சுமி அழைத்துச் செல்ல முன்வரவில்லை, இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பில் அவர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், அங்குலட்சுமி உறவினர் என கூறி ஒருவர் அங்கு வந்தார் அவரிடம் கேட்கும்போது, ஆங்கு லட்சுமிக்கு, ஹான்ஸ், கஞ்சா, மது உள்ளிட்ட பழக்கங்கள் இருப்பதாகவும், அவர் சரக்கு போட்டு விட்டால், ஒரே ரகளைதான் இருக்கும் என அசால்டாக பதில் அளித்தார்.
தமிழகத்தில் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு இளம் வயதினர் அடிமை ஆகி வருகின்ற சூழலில் இளம் பெண் ஒருவர் மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அங்குள்ள பொது மக்களுடைய மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.