10 ரூபாய்க்கு 3 வேளையும் வயிறார சாப்பாடு; அந்த மனசு தான் சார்... - அறக்கட்டளைக்கு குவியும் பாராட்டு

By Velmurugan s  |  First Published May 29, 2023, 1:23 PM IST

ஈரோடு மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் வகையில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் 10 ரூபாய்க்கு அளவில்லா உணவு வழங்கும் தனியார் தொண்டு நிறுவனத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான ஆற்றல் அறக்கட்டளையானது காலை, மதியம், இரவு என 3 வேளையும் ரூ.10க்கு அளவில்லா உணவை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அந்த அறக்கட்டறையின் தலைவர் கூறுகையில், “ஈரோடு பகுதியில் அறக்கட்டளை சார்பில் புதிய உணவகம் செயல்பட உள்ளது. இன்று முதல் பத்து ரூபாய் கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான, தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அளவில்லா உணவு பரிமாற ஏற்பாடு செய்துள்ளோம்.

Tap to resize

Latest Videos

இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் ஆறு பேர் இந்த பணியில் முழு நேரமாக ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். காலை, இட்லி, சாம்பார் மற்றும் சட்னி 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாய் 12 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு இட்லி, சாம்பார் மற்றும் சட்னி. 7 மணி முதல் 9 மணி வரையும் பரிமாறப்படும். தேவையான பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். பத்து ரூபாய் செலுத்தினால் போதும் போதிய உணவுகளை வாங்கி சாப்பிடலாம்.

திருச்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கடித்து கொல்ல முயற்சி - காவல்துறை விசாரணை

ஆற்றல் அறக்கட்டளை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு அரசு பள்ளிகள் மேம்படுத்துதல், சமுதாயக் கூடங்கள் கட்டுதல், ஆலயங்கள் புதுப்பித்தல், கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவித்தல், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளித்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த மூன்று வருடங்களாக செய்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. 

ஏற்காடு கோடை விழாவில் காட்சிபடுத்தப்பட்ட செல்லப்பிராணிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

இதன் தொடர்ச்சியாக பசியாற விரும்பும் மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் உணவகத்தை இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

click me!