விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

By vinoth kumar  |  First Published Jan 27, 2024, 8:34 AM IST

நேற்று இரவு  மாநாட்டை முடித்துக்கொண்டு வேப்பூர் - விருதாச்சலம் வழியாக 23 பேருடன் வேன் வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 


திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வேன் மற்றும் பேருந்தில் வருகை தந்தனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. திடீர் மாரடைப்பு.. இளம் சிஆர்பிஎப் வீரர் துடிதுடித்து உயிரிழப்பு..!

இந்நிலையில், நேற்று இரவு  மாநாட்டை முடித்துக்கொண்டு வேப்பூர் - விருதாச்சலம் வழியாக 25 பேருடன் வேன் வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உத்திரகுமார், யுவராஜ், அன்புச்செல்வன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!

மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!