கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் என்எல்சி நிறுவனத்தில் உள்ள 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!
இந்நிலையில், நெய்வேலி என்.என்.சி நிறுவனத்தில் உள்ள 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்க தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.