ஆணழகன் போட்டி: பிரட் தொண்டையில் சிக்கி 21 வயது பாடிபில்டர் பலி

By SG Balan  |  First Published Feb 28, 2023, 12:03 PM IST

21 வயது இளைஞர் உடற்பயிற்சி செய்யும்போது இடைவேளையில் சாப்பிட்ட பிரட் தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


21 வயதே ஆன இளம் பாடிபில்டர் உடற்பயற்சி செய்துவிட்டு சாப்பிட்ட ரொட்டி தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் எம் ஹரிஹரன். 21 வயதான இவர் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொள்வதற்காக பயிற்சி பெற்று வந்தார். அந்தப் போட்டியில் 70 கிலோ எடை பிரிவில் அவர் போட்டியிட இருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

Gym Death: ஜிம்மில் புஷ்-அப் செய்தவருக்கு மாரடைப்பு! 24 வயது இளம் காவலர் பலி!

இந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் கடலூர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். ஹரிஹரன் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.

பின் இடைவேளை எடுத்துக்கொண்டு சாப்பிடச் சென்றிருக்கிறார். இரவு உணவாக ரொட்டியை உட்கொண்டபோது ஒரு பெரிய துண்டு அவரது தொண்டையில் சிக்கிவிட்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய ஹரிஹரன் மயக்கம் அடைந்தார். உடன் இருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

உடற்பயிற்சியில் ஈடுபடும்போது திடீர் மரணம் ஏற்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய மரணங்களில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர். இதற்குக் பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதை திடீரென நிறுத்திவிடுவது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஜிம்மில் நேர்ந்த விபரீதம்! உடற்பயற்சி செய்யும்போது திடீர் மரணம்! வைரலாகும் சிசிடிவி காட்சி!

click me!