கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து இன்று காலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது ராணிப்பேட்டையில் இருந்து அரியலூர் நோக்கி மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
கடலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் பள்ளி குழந்தைகள் 30 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து இன்று காலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது ராணிப்பேட்டையில் இருந்து அரியலூர் நோக்கி மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதையும் படிங்க;- அம்மா ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணிட்டாம ஒருத்தன்.. தாயிடம் கதறிய மகள்..!
பயத்தில் குழந்தைகள் லாரி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். லேசான காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! டிரைவர், நடத்துநருக்கு புதிய உத்தரவிட்ட போக்குவரத்துதுறை