கடலூரில் பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து கொலை.. ஒருவர் படுகாயம்..!

By vinoth kumar  |  First Published Feb 8, 2023, 1:35 PM IST

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு ஆசினி என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது.


கடலூரில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு ஆசினி என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில், தமிழரசியின் அக்காவான தனலட்சுமி சர்குரு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

வழக்கம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக் கொண்டு தனலட்சமி குழந்தையுடன் சகோதரியான தமிழரசி வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அறிந்து கணவர் சர்குரு தமிழரசி வீட்டுக்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அப்போது, தனலட்சுமிக்கும், சர்குருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சர்குரு அங்கு இருந்த தமிழரசி, தனலட்சுமி,  இரண்டு குழந்தைகள் மீது டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார். 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தமிழரசி, சர்குரு, இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதில், தனலட்சுமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே தனலட்சுமி மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!