கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக மகேந்திரன் (58) பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மகேந்திரனுக்கு அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
சிதம்பரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. மகேந்திரன் (58) இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக மகேந்திரன் (58) பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மகேந்திரனுக்கு அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க;- Nanjil Sampath: நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சிதம்பரம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பித்தக்கது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!