கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள், ஆடுகளின் உரிமையாளர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இலட்சுமணன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தாா். இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம், எலவசனூர் கோட்டையில், சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்
இந்நிலையில், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஆடுகளின் நடுவே பாய்ந்தது. இந்த விபத்தில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பேருந்து மோதியதில் சுமார் 100 ஆடுகள் உயிரிழந்தன.
விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது அடுத்தடுத்து வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய பிரகாசமான வாய்ப்பு - கார்த்தி சிதம்பரம் ஆரூடம்
கடலூர் மாவட்டத்தில் மழை காலம் நிறைவடைந்து பனி காலம் நடைபெறுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறியவிட்டபடியே பயணிக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து நடைபெற்றதா? என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.