கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபகமாக உயிரிழந்தனர்.
கடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபகமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்? சவுக்கு சங்கர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு..!
உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- என் காதலியே உலகத்தை விட்டு போயிட்டா.. எனக்கு என்ன வேலை இருக்கீங்க.. காதலன் எடுத்த விபரீத முடிவு..!