படம் பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் அசுர வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்து நடத்தில், இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகியது. அதை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் பலர் நேற்று முன்தினம் இரவு முதலே திரையரங்க வாசல்களில் குவியத் தொடங்கினர். சிறப்பு காட்சிகளுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இறுதியாக நேற்று அதிகாலை வெளியாகியது.
முதல் நாள், முதல் காட்சியிலேயே படத்தை பார்த்துவிட வேண்டும் என்று பல ரசிகர்கள் முண்டியடித்து காத்திருந்தனர். அதில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திரையரங்கத்திற்கு வேகமாக சென்று மோதியதில் இரண்டு வயது குழந்தை பலியாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
நல்லாத்தூரைச் சேர்ந்தவர் இன்பராஜ். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர், அவரது அனைத்து படங்களையும் முதல் காட்சியிலேயே பார்த்து விடுவார் என்று கூறப்படுகிறது. நேற்றும் பிகில் திரைப்படத்தை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காவலர்களால் கொண்டு செல்லப்பட்டது.
படம் பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் அசுர வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்து நடத்தில், இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டு வா மகனே சுர்ஜித்..! தமிழகமே ஏங்குகிறது..