பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..!

By vinoth kumar  |  First Published Oct 22, 2019, 6:00 PM IST

சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராகுல் (17). முத்தையா பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராகுல் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!