நியாய விலைக் கடைகளில் இனி அரசிக்கு பதிலாக கேழ்வரகு - அமைச்சர் சக்கரபாணி

By Velmurugan sFirst Published Jan 7, 2023, 3:31 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தற்போது அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பாக தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்க பணமும், ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். 

அண்ணமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம் - திருநாவுக்கரசர் பரிந்துரை

அதன்படி வருகின்ற திங்கள் கிழமை 9, 10, 11, 12 ஆகிய நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் 9ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. 

தமிழக முதல்வரை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு சிறப்பு பொது அறிவு விநியோகத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான். அன்றைக்கு அனைவருக்கும் புரதச்சத்து கிடைக்க வேண்டுமென துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா என அனைத்தும் வழங்கப்பட்டது. 

உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை நிச்சயமாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய முயற்சி மேற்கொள்வேன். தற்பொழுது கேழ்வரகு தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வாங்கி வருகின்றோம். முன்னோட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இவற்றை விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

நியாய விலைக் கடைகளில் கைரேகை வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், விவசாய வேலை செய்து வருவார்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூரில் முன்னோட்டமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு சோதனை அடிப்படையில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!