கோவையில் ஹாரன் அடித்ததால் கோபம்; வேன் ஓட்டுநரை தாக்கிய கார் ஓட்டுநர்!!

Published : Aug 19, 2023, 03:07 PM IST
கோவையில் ஹாரன் அடித்ததால் கோபம்; வேன் ஓட்டுநரை தாக்கிய கார் ஓட்டுநர்!!

சுருக்கம்

சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த காரணத்திற்காக வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சூலூரில் ரங்கநாதபுரம் பிரிவு அருகே தனியார் மில் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிய வேன் ஒன்று திருச்சி சாலையில் காங்கேயம் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பணி முடிந்ததும் ஊழியர்களை குறித்த நேரத்தில் அவர்களது வீட்டில் இறக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டுநர் யுவராஜ் வேனை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது வேனுக்கு முன்பு சென்று கொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்வதற்காக தொடர்ந்து யுவராஜ் ஹாரன் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் வேனை வழிமறித்தார். காரில் இருந்து இறங்கி வேன் ஓட்டுநர் யுவராஜை தாக்கியுள்ளார். சற்றும் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் வேன் ஓட்டுநர் யுவராஜ் நிலைகுலைந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சரவணகுமாரை தடுத்து நிறுத்தினர்‌. 

செக்ஸ் வீடியோ.. 50 ஆண்கள்.. 35 லட்சம் பணம் பறித்த பெண்.. பாலியல் மோசடி கும்பல் எப்படி சிக்கியது?

இந்த சம்பவம் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் ஓட்டுநர் மற்றும் வேன் ஓட்டுநர்  யுவராஜை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஹாரன் அடித்ததால் வேன் ஓட்டுனரை சக வாகன ஓட்டி ஒருவரே தாக்கிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லீவ் இன் உறவு.. படுக்கைக்கு வர மறுத்த பெண்.. ஸ்க்ரூடிரைவரால் தாக்கி கொல்ல முயன்ற நபர் - சிக்கியது எப்படி?

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?
கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!