உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான நீலகிரி குறித்து கூகுளில் தேடினால் 2ஜி ஊழல் பற்றி வருவதாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியினர் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சரும், நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளருமான எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க, ஐ.ஜே.கே, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியோரின் உள்ளூர் பிரமுகர்களுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், "நேற்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த அசௌகரியமான காரியத்துக்கு காவல்துறையின் மெத்தன போக்கும், சரியாக திட்டமிடல் இல்லாததுமே காரணம். பிரதமர் நரேந்திர மோடி நீலகிரியில் பிரசாரம் செய்வதற்கு கோவை மற்றும் நீலகிரிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதிகப்படுத்தியுள்ளனர்.
undefined
தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை; உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிகூடங்கள், அங்கன்வாடி போன்ற மக்களின் அடிப்படை வசதிகள் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்துள்ளனர். போதை பொருள் விநிகோகம் உள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருக்கிறார்கள். உலகின் சுற்றுலா தளங்களில் பேர் போன நீலகிரியை இன்று கூகுலில் தட்டினால் 2-ஜி பற்றி வருகிறது.
நாங்க ஜெயிச்சா ரூ.1000 இல்ல ரூ.1,500; திமுகவுக்கு அண்ணாமலை சவால்
அந்தளவு இத்தொகுதி மக்களை தற்போதைய எம்.பி அவமானப்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தால் குற்றம் நடந்துள்ளது. முழு விசாரணை தேவை என ஏற்கப்பட்டுள்ளது. அதோடு மக்களின் இறை நம்பிக்கைகளை, பெண்களை, பட்டியலின, அருந்ததியர் மக்களை தரைக்குறைவாக பேசுவதுதான் இவரது வேலையாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தையும், அம்பேத்கரையும் பா.ஜ.க மதிக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணியாக உள்ளது என்றார்”.