வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 15ம்தேதி வரை பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடைபெறும் இடத்தை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சுற்றுலாத்துறை செயலர் சந்தீப்நந்தூரி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அலோசனை நடத்தினர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, நெதர்லாந்து, வியட்நாம், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத வெப்பக்கற்று பலூன்களை கொண்டு வந்து, இங்கே பறக்க விட உள்ளனர்.
இதையும் படிங்க.. 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !
இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பலூன் பறக்க விடப்பட உள்ளது. திமுக ஆட்சி அமைந்த உடன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் பூம்புகார் ஒகேனக்கல் சுற்றுலா தலங்களை புதுப்பிக்கப்படும். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை, பொள்ளாச்சியில், தனியாருடன் இணைத்து தமிழக அரசு பலூன் திருவிழா நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, முதன் முறையாக தமிழக சுற்றுலா துறை மூலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !