இப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது?... மிரள வைக்கும் வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 22, 2021, 7:08 PM IST
Highlights

இப்படியெல்லாம் செஞ்சா ஏன் கொரோனா 3வது அலை வராது? என விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் இருந்து மக்களை காக்க முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பல மாதங்களுக்கு நீடித்த நிலையில் அரசு சிறிது சிறிதாக தளர்வுகளை ஆரம்பிக்க ஆரம்பித்தது. தேர்தலுக்கு முன்னதாக கிட்டதட்ட அனைத்து தளர்வுகளுமே அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு கொரோனா 2வது அலையின் கோரதாண்டவமும் தொடங்கியது. 

புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசுக்கு கொரோனா 2வது கடும் சவாலாக மாறியது. இருப்பினும் களப்பணியும், தீவிர ஊரடங்கு நடவடிக்கைகளும் சில மாதங்களிலேயே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. கொரோனா தொற்றில் முதலிடம் வகித்து வந்த கோவையில் கூட நேற்று தொற்றின் எண்ணிக்கை 200-யை விட குறைவாகவே பாதிவாகியிருந்தது. 

கொரோனா தொற்று கணிசமாக குறைய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் காட்டும் ஆர்வமும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேசமயத்தில் கொரோனா தடுப்பூசி  மையங்கள் முன்பு சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் முண்டியடிக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது பீதி கிளம்புவதை தவிர்க்க முடியாமல் இல்லை. இப்படியெல்லாம் செஞ்சா ஏன் கொரோனா 3வது அலை வராது? என விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள திப்பனூர் பள்ளியில் கொரோனா டோக்கன் வாங்க மக்கள் ஒருவரை, ஒருவர் முந்திக் கொண்டு முண்டியடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொரோனா 2வது அலையின் போது கோவையில் தொற்று பரவல் அதிகரித்து தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக மாறியது. எனவே கோவையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம்  காட்டி வருகின்றனர். அதனால் தான் இப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள போட்டி போட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 

Public gathered for tokens at Thippanur school in periyanaickenpalayam block without maintaining pic.twitter.com/gpMDZXEKSe

— Jackson Johnson (@ToiJack)
click me!