காவல் நிலையத்தில் புகுந்த மலைப்பாம்பு..! அலறியடித்து ஓடிய போலீசார்..!

By Manikandan S R SFirst Published Feb 4, 2020, 5:54 PM IST
Highlights

நேற்று இரவு காவல்நிலையத்தில் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் பணியில் இருந்தனர். புகார் அளிப்பது சம்பந்தமாக பொதுமக்கள் சிலரும் அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காவல் நிலையத்தில் புகுந்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இருக்கிறது வடவள்ளி. இங்கு கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் 10 பெண் போலீசார், 9 ஆண் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர் .போலீஸ் நிலையம் அமைந்திருக்கும் பகுதி முட்புதர்கள் அதிகம் உள்ள இடம் என்று கூறப்படுகிறது.

இதனால் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு காவல்நிலையத்தில் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் பணியில் இருந்தனர். புகார் அளிப்பது சம்பந்தமாக பொதுமக்கள் சிலரும் அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காவல் நிலையத்தில் புகுந்துள்ளது.

காவல் நிலைய வரவேற்பு அறையில் மலைப்பாம்பு நுழைவதை பார்த்து பணியில் இருந்த பெண் போலீசார் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் பொதுமக்களின் சத்தத்தை கேட்டதும் வெளியே சென்ற பாம்பு அங்கிருந்த புளிய மரம் ஒன்றின் மீது ஏற முயற்சி செய்தது. பின் அருகிலிருக்கும் புதருக்குள் நுழைந்துள்ளது. காவல் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் முட்புதர்கள் அதிகம் இருப்பதால் பாம்புத் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

click me!