தமிழகத்தின் 3 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் சேவை..! இன்று முதல் தொடக்கம்..!

By Manikandan S R SFirst Published Oct 15, 2019, 5:31 PM IST
Highlights

தமிழகத்தில் கோவை-பழனி, கோவை-பொள்ளாச்சி, சேலம்-கரூர் ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிய பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலமாக இணைக்கும் திட்டத்தின் கீழ் 10 பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே துறை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக இதற்கான வழித்தடங்கள் நாடு முழுவதும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மூன்று வழித்தடங்கள் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் கோவை-பழனி, கோவை-பொள்ளாச்சி, சேலம்- கரூர் இடையே மூன்று புதிய பயணிகள் ரயில்களின் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

சேலம்-கரூர் இடையே செல்லும் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.25 மணிக்கு கரூரை சென்றடையும் அதேபோல மறுமார்க்கத்தில் கரூரிலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு சேலம் சென்றடையும்.

கோயம்புத்தூர்-பழனி இடையே செல்லும் ரயில் தினமும் மதியம் 1.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். அதேபோல பழனியிலிருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு கோவையை அடையும்.

பொள்ளாச்சி-கோயம்புத்தூர் இடையேயான பயணிகள் ரயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். அதேபோல கோயம்புத்தூரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

வாரத்தில் ஞாயிறு தவிர மீதி ஆறு நாட்கள் இந்த ரயில்சேவை இருக்கும் என்று ரயில்வே துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!