விபத்தில் சிக்கிய குடும்பத்தை காப்பாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்... குவியும் வாழ்த்துகள்!!

By sathish kFirst Published Oct 9, 2019, 12:48 PM IST
Highlights

ஈரோடு அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினர்.

கடந்த சில தினங்களுக்கு விபத்தில் அடிபட்டு பலத்த காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த சிறுமி மற்றும் பெற்றோரை காப்பாற்றிய தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று முன்தினம் சாலை விபத்தில் ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் டூவீலரில்  ஒத்தக்குதிரை-தாசம்பாளையம் பகுதிக்கு இடையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் ஒன்று டூவீலர் மீது மோதியது. அந்த வாகனத்தின் அடையாளம் தெரியவரவில்லை. ஆனந்த கிருஷ்ணன் குடும்பம் பயணம் செய்த டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

அந்த சமயத்தில், அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கியவர்களை பார்த்த உடன் காரை நிறுத்தும்படி தனது டிரைவருக்கு அவர் சொன்னார். பின்னர் பதறியடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் சிக்கிய மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன் அவர்கள் மூன்றுபேரையும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு முன்பாக கோபி அரசு மருத்துவமனையின் டாக்டர்களை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பு கொண்டு. அவர்கள் மூன்றுபேருக்கும் சிறப்பான சிகிச்சையை அளிக்கும்படி அப்போது அவர் டாக்டர்களுகளிடம் கேட்டுக்கொண்டார். இதன் பேரில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.சாலை விபத்துக்களில் தனக்கு வந்த பாதுகாப்பு வாகனத்தில் அழைத்து சென்று உதவிய அமைச்சர் செங்கோட்டையனை கண்ட பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர்.

இதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர்,. கனிமொழி உள்ளிட்டோர் சாலை விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை தங்களது வாகனத்திலேயே அழைத்து சென்று சிகிச்சை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!