புத்தாண்டு, தொடர் விடுமுறை; அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published : Apr 13, 2023, 07:12 PM IST
புத்தாண்டு, தொடர் விடுமுறை; அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சுருக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளைய தினம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.

தமிழ் புத்தாண்டு தினம் பொது விடுமுறை என்பதாலும், அதன் தொடர்ச்சியாக சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதாலும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால்  அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது

அதன்படி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே போல கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற பகுதிகளுக்குச் செல்ல 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமாக கோவையில் இருந்து மட்டும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

மது போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த போதை ஆசாமி தற்கொலை; சிறுமிகள் படுகாயம்

மேலும் பயணிகளின் வருயை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?