அரசு பேருந்துகளில் சூப்பர் மாற்றம்.! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Sep 04, 2025, 03:37 PM IST
Government Bus

சுருக்கம்

பேருந்துகளில் பயணிகளுக்காக  அடுத்த பேருந்து நிறுத்தத்துக்கான அறிவிப்பு பலகையில் பேருந்து நிறுத்தங்களின் பெயர் முழுமையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Transport Corporation announces change in bus stop notice board : தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பேருந்துகளில், பயணிகளின் புகாரின் பேரில், அடுத்த பேருந்து நிறுத்தத்துக்கான அறிவிப்பு பலகையில் பேருந்து நிறுத்தங்கள் பெயர் ஒன்றாக சேர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  தகவல் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுத்த அறிவிப்பு பலகை- பொதுமக்கள் புகார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தத்துக்கான அறிவிப்பு பலகையில் (Next stop announcement visual display board) காலனி என்ற வார்த்தை தனியாக வராமல், போலீஸ் காலனி, எல்ஐசி காலனி, நெய்தலூர் காலனி, Ex-serviceman காலனி, Teachers காலனி, பர்மா காலனி, EB காலனி மற்றும் அரசு காலனி என்று ஒன்றாக சேர்த்து வெளியிட கோரி பயணிகளிடமிருந்து புகார் மனு பெறப்பட்டுள்ளது.

காலனி என்ற வார்த்தை- அமைச்சர் புதிய திட்டம்

மேற்படி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தின் திருச்சி, கரூர் உள்ளிட்ட மண்டலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தத்துக்கான அறிவிப்பு பலகையில் (Next stop announcement visual display board) காலனி என்ற வார்த்தை தனியே வெளியிடாமல்,

 காரண பெயர்களோடு காலனி என்ற வார்த்தை சேர்த்து அடுத்த நிறுத்தத்துக்கான அறிவிப்பு வெளியிட தக்க வகையில் செயலியில் உரிய மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து  துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!
கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!