தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக்கில் எவ்வித இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாநகராட்சியில் தற்பொழுது 10 பேட்டரி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பேட்டரியை பயன்படுத்தி ஓடும் இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கோவை மாநகராட்சியில் 68 சதவீதம் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 760 பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் 445 பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.7.5 கோடி நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்; நேரில் சென்று வாழ்த்திய எம்.பி.வெங்கடேசன்
தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பொது மக்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்த போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியதாகவும் விளக்கமளித்தார்.
ஒரே வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ
மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி மதுபான விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை மட்டும் கண்காணித்து வருகிறோம். இதேபோல் டெட்ரா பாக்கெட் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுப்போம் எனவும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.