கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் சிறிது நேரத்தில் சாலையோரம் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் நேற்று மாலை 5.50 மணியளவில் மர்ம நபர் ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி உள்ளே வந்துள்ளார். மேலும் அந்த நபர் அலுவலகத்திற்குள் வந்து கதவை சாத்திய நிலையில், அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் அவரை அலுவலகத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயன் மர்ம நபரை வேகமாக சாலையில் தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. மர்ம நபர் அலுவலகத்திற்குள் புகுந்தது குறித்து இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் முழுவதும் உள்காயம் இருப்பதால், வாகனம் மோதி இறந்திருக்கலாம் எனவும், பந்தய சாலை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த பள்ளி மாணவி; 2 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது