அடப்பாவி.. தடபுடலாக நடந்து வந்த திருமண ஏற்பாடுகள்.. கள்ளக்காதலியை பிரிய முடியாமல் வாலிபர் செய்த காரியம்..!

Published : Nov 06, 2021, 07:56 PM IST
அடப்பாவி.. தடபுடலாக நடந்து வந்த திருமண ஏற்பாடுகள்.. கள்ளக்காதலியை பிரிய முடியாமல் வாலிபர் செய்த காரியம்..!

சுருக்கம்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 27 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் கள்ளக்காதலியை பிரிய முடியாத ஏக்கத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் மனோஜ் (32). போட்டோகிராபர். வேலைக்காக கோவைக்கு வந்த இவர் சிவானந்தா காலனி சாஸ்திரி ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 27 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!

இதனையடுத்து, மனோஜின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பின்னர் ஒரு இளம்பெண்ணை பார்த்து நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கள்ளக்காதலியை பிரிந்து செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். கள்ளக்காதலியை பிரிந்து செல்வதா? அல்லது பெற்றோர் பார்த்து பேசி முடித்த பெண்ணை திருமணம் செய்வதா? என மனோஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோஜ் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினார். 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மனோஜை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனோஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலிக்காக வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?