கோரிக்கை வைத்த முதுமலை யானை பராமரிப்பாளர் பெள்ளி.. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.!

By vinoth kumar  |  First Published Aug 2, 2023, 2:47 PM IST

தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் பெள்ளி அவர்களுக்கு வழங்கினார். 


நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள வி.பெள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர். பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மது பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.! திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்ப்பதா.?டிடிவி தினகரன் ஆவேசம்

கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடியும், பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர்  நீலகிரி மாவட்ட வருகையின் போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்டிய ஓபிஎஸ், டிடிவி.தினகரன்.. அதிர்ச்சியில் அதிமுக..!

தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் பெள்ளி அவர்கள், அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் பெள்ளி அவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வின்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

click me!