வலி தாங்காமல் கதறிய ‘ஜெயமால்யதா’...கோவையில் அரங்கேறிய கொடூரம்... வைரல் வீடியோவால் அதிரடி நடவடிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 23, 2021, 11:07 AM IST
Highlights

இந்த முறை நேர் எதிரான சம்பவம் ஒன்று யானைகள் முகாமில் அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முகாம கடந்த 8ம் தேதி தொடங்கியது, இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 26 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளன. 

இந்த முகாமில் யானைகளுக்கு நல்ல உணவுகள், ஷவர் குளியல், உடற்பயிற்சி, மருத்துகள் கொடுப்பது என சகலவிதமான விஷயங்களுக்கும் கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை நேர் எதிரான சம்பவம் ஒன்று யானைகள் முகாமில் அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலைச் சேர்ந்த ஜெயமால்யதா என்ற யானையை அதன் பாகனான ராஜாவும், உதவியாளர் காவடியும் குச்சியால் சகட்டுமேனிக்கும் அடிக்கும் காட்சியும், வலி தாங்காமல் யானை அலறும் சத்தமும் உள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. காண்போர் நெஞ்சை பதறவைக்கும் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, யானையை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலி க்கத்தொடங்கியது. இந்நிலையில் யானையைத் தாக்கிய பாகன் ராஜாவை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரை கைதுசெய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!