கோவையில் சமூக பரவலாக மாறுகிறதா கொரோனா? 2 பகுதிகளில் 82 பேருக்கு தொற்று.. வீட்டைவிட்டு வெளியேற தடை..!

By vinoth kumarFirst Published Jun 11, 2021, 1:06 PM IST
Highlights

கோவை மாவட்டத்தில் சமூக தொற்றாக கொரோனா பரவி விட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கோவையில் 2 பகுதிகளில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகமாக இருந்தது. தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  2 முறை ஆய்வு நடத்தினார். 

இந்நிலையில், கோவை மாவட்டம் அத்திக்குட்டையில் மளிகை வியாபாரம் செய்து வந்த நெல்லையை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தார். இறுதிச்சடங்கில் அவரது உறவினர்களும், சுற்றுவட்டாரத்தினரும் பங்கேற்றனர். அப்போது, பலருக்கும் தொற்று பரவியது. பரிசோதனையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அத்திக்குட்டை பகுதியைச் சுற்றிலும் இரும்பு தகர ஷீட் அடித்து தனிமைப் படுத்திய பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதேபோல், நஞ்சுண்டாபுரம் பகுதியில் இதுவரை 737 பேரை பரிசோதித்ததில் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கோவை மாவட்டத்தில் சமூக தொற்றாக கொரோனா பரவி விட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

click me!