கொரோனாவை வைத்து கல்லா கட்டிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆப்பு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published : Jun 04, 2021, 11:21 AM ISTUpdated : Jun 04, 2021, 11:27 AM IST
கொரோனாவை வைத்து கல்லா கட்டிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆப்பு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

கோவையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனையில் புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. 

கோவையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனையில் புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. 

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால்,  சிகிச்சை பலனின்றி ஷாஜகான் மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம்  கட்டணமாக கேட்டுள்ளனர். ஆனால்  காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்கள் அடிப்படையில்  விசாரணை நடத்த  குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனையடுத்து சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்