வாகனங்கள் நிறுத்தப்பட்டதை வாய்ப்பாக கருதி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை ஆகியவை அதிகளவில் உள்ளன. பலமுறை இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி நெடுஞ்சாலைகளை கடப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகள் ரன்னிமேடு, பில்லிமலை, சின்ன கரும்பாலம் போன்ற பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வருகின்றன.
இந்த நிலையில், காட்டு யானைகள் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வலம் வரும் போது மிகவும் கவனமாக இருக்கும். வனத்துறை அதிகாரிகள் குன்னூர் சுற்றுலாவாசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க அவ்வப்பது அறிவுறுத்தி வருகின்றனர். காட்டு யானைகள் கூட்டமாக வரும் போது அவை எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை கணிக்க முடியாது. சமயங்களில் காட்டு யானைகள் வாகனங்களை சேதப்படுத்தும், சில முறை பயமுறுத்தி விரட்டி அடிக்கும்.
காட்டு யானைகளுடன் செல்ஃபி:
இதே போன்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறி இருக்கிறது. இதில் சிலர் காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். மேலும் அவற்றை மிரட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ந்த யானைகள் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை விரட்டி அடித்தது.
சம்பவத்தன்று காட்டு யானைகள் குன்னூரை அடுத்த காட்டேரி பகுதியில் சாலையை கடக்க காத்திருந்தன. இதை பார்த்ததும், அந்த வழியே வந்த வாகனங்கள், யானைகள் சாலையை கடந்த செல்ல வழிவிட்டு அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதை வாய்ப்பாக கருதி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
விரட்டி அடிப்பு:
மேலும் சிலர் காட்டு யானைகளை மிரட்டும் வகையில் குரல் எழுப்பினர். இளைஞர்கள் மிரட்டியதில் கோபமுற்ற காட்டு யானைகள் கோபமுற்றன. இதை அடுத்து காட்டு யானைகள் அங்கிருந்தவர்களை பயமுறுத்தி அங்கு இருந்து விரட்டி அடித்தன. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக இடத்தை விட்டு வெளியேறினர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து கிளம்புவதை பார்த்து, அதன் பின் சில நேரம் கழித்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றன. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.