இதுக்கு மேல முடியாது... ரெயிலை நிறுத்திய பயணி... காரணம் கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள்..!

By Kevin KaarkiFirst Published Mar 30, 2022, 12:34 PM IST
Highlights

ஈரோடு, சேலம் போன்ற ரெயில் நிலையங்களில் பயணிகள் கழிவறையை சுத்தம் செய்ய கூறியும், அதிகாரிகள் நவடிக்கை எடுக்கவே இல்லை என சொல்லப்படுகிறது.

சென்னை மற்றும் கோவை இடையே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் கோவையில் இருந்து காலை 6.15 மணி அளவில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு இருக்கிறது. சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில், ரெயிலின் குளிர்சாதன பெட்டியில் உள்ள கழிவறை சுத்தமின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் கழிவறைக்கு செல்லாமல் சுமார் நான்கு மணி நேரம் பொறுமையாக காத்திருந்ததாக தெரிகிறது. வழியில் ஈரோடு, சேலம் போன்ற ரெயில் நிலையங்களில் பயணிகள் கழிவறையை சுத்தம் செய்ய கூறியும், அதிகாரிகள் நவடிக்கை எடுக்கவே இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காலை புறப்பட்ட ரெயில் மதிய வேளையில் அரக்கோணம் வந்தடைந்து இருக்கிறது.

அபாய சங்கிலி:

அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரெயில் திடீரென நிறுத்தப்பட்டது. சட்டென நிறுத்தப்பட்டதை அடுத்து ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் அனைவரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ரெயில் பெட்டி ஒன்றில் பயணித்த பிரசாந்த் என்பவர் அபாய சங்கிலியை இழுத்து இருக்கிறார். இவரது செயலை அடுத்து ஓட்டுனர் ரெயில் நிறுத்தி இருக்கிறார் என கண்டுபிடிக்கப்பட்டது. 

ரெயிலை ஏன் நடுவழியில் அவசர அவசரமாக நிறுத்தினீர்கள் என ரெயில்வே அதிகாரிகள் பிரசாந்த் இடம் கேள்வி எழுப்பினர். அதிகாரிகளின் பரபர விசாரணையில் சற்றும் டென்ஷன் ஆகாத பிரசாந்த் அதிகாரிகளுக்கு கூலாக பதில் அளித்தார். ரெயிலை நிறுத்த பிரசாந்த் கூறிய பதில் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பிரசாந்துக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியாமல் அதிகாரிகள் வாயடைத்து நின்றதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி:

ரெயிலை நிறுத்திய பிரசாந்த் அப்படி என்ன பதில் அளித்து இருப்பார்? ரெயில் பெட்டியில் உள்ள கழிவறை தூய்மையாக இல்லை. பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக நான்கு மணி நேரமாக பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என கூறினார். 

இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் கழிவறை எந்த நிலையில் இருக்கும் என நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். பலதரப்பட்ட மக்கள் பயணம் செய்யும் ரெயில்களின் கழிவறை எப்போதும் சுத்தமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் ரெயில் கழிவறை சுத்தம் செய்யப்படாத காரணத்தால் பயணி ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் ரெயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கழிவறை சுத்தம் செய்யப்பாடததை கண்டித்து நடுவழியில் ரெயிலை நிறுத்தியதற்து பிரசாந்த் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

click me!