பல்லடம் அருகே ஒன்வேயில் வந்த ஆட்டோவால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

By Velmurugan s  |  First Published Oct 26, 2023, 5:37 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் வெள்ளகோவிலைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த வாலிபர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை காளிவேலம்பட்டி பிரிவு அருகே இன்று நண்பர்கள் இருவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனிடையே எதிரே ஒன்வேயில் வந்த ஆட்டோவின் மீது மோதாமல் இருக்க வலது புறம் நோக்கி வாகனத்தை இயக்கிய போது குறுக்கே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெள்ளக்கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி இந்துமா (வயது 20) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த விஷால் (20) என்ற கல்லூரி மாணவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்திற்கு காரணமான ஒன்வேயில் வந்த ஆட்டோ மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனம் அங்கு இருந்து விபத்து நிகழ்ந்த உடன் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

மதுரையில் அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கல்லூரி மாணவர் விஷால்க்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வெள்ளகோவிலை சேர்ந்த கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!