வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்... ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு..!

By vinoth kumarFirst Published Dec 16, 2019, 1:38 PM IST
Highlights

கோவையில் கேந்தரிய வித்யாலயா பள்ளி மாணவர்களை பிறப்புறுப்பில் அடித்து துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் 4 ஆசிரியைகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

கோவையில் கேந்தரிய வித்யாலயா பள்ளி மாணவர்களை பிறப்புறுப்பில் அடித்து துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் 4 ஆசிரியைகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

கோவை சூலூர் பகுதியில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்க முடிவெடுத்தனர். 

இந்நிலையில், வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதன் உட்பட 4 ஆசிரியைகள் இணைந்து மாணவர்களின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கதறியபடி முறையிட்டுள்ளனர். இதனையடுத்து, மாணவர்களை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைமை ஆசிரியர் மேகநாதன் மாணவர்களிடம் பலமுறை தவறாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மாணவர் கொடுத்த புகாரின் பெயரில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!