கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக பேரூர் ஆதீன மடத்திற்கு வந்தார். அண்ணாமலைக்கு பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும் நெற்றியில் திருநீர் பூசி ஆசி வழங்கினார். பயபக்தியுடன் அண்ணாமலை பேரூர் ஆதீனத்தை குனிந்து வணங்கி தரிசனம் செய்து திருச்சிற்றம்பலம் மேடையில் அமர்ந்துள்ள நடராஜனை வணங்கி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும், தேர்தலை காரணம் காட்டாமலும் உடனடியாக சிறுவாணி, பில்லூர் அணைகளில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அரசியலை தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு கேரளா அரசுடன் திமுக அரசு முயற்சிக்க வேண்டும்.
undefined
கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு.. தொடர்ந்து கள்ளமௌனம் காக்கும் திமுக - விளாசும் பாஜக தலைவர் அண்ணாமலை!
குளங்கள், நீர் வரும் பாதைக்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு தமிழக அரசு சரியான முறையில் கையாளுவது இல்லை. ஒரு லட்சம் குளங்களை குஜராத் மாநிலத்தில் மக்கள் பங்களிப்புடன் முதலமைச்சராக இருந்தபோது மோடி செய்து காட்டினார். நமது தமிழகத்தில் அதே போன்ற தண்ணீர் பிரச்சினை வரக்கூடாது என்பதற்கு மோடி அவர்களுக்கு எண்ணம் உள்ளது. ஆனால் ஆளுகின்ற அரசு முறையாக செயல்படுத்துவதில்லை.
அதே போல நேரடியாக குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல் சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டும், முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுவதாகவும், தெரிவித்தார். தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசியலோடு ஆன்மீகமும், அரசியலும் பிரிக்கக் கூடாது. எப்பொழுதெல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ அவர்கள் நேரடியாக ஆதீனங்கள் போல குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.