'திமுக சின்னம் உதயசூரியன் கிடையாது.. கொலுசு சின்னம் தான் சரி..' திமுகவை பொளந்து கட்டிய சி.பி.ஆர்

By Raghupati R  |  First Published Apr 9, 2022, 3:12 PM IST

அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருக்கிறார்கள். கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளது. காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர். 


சொத்து வரி உயர்வு :

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்தி பார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 

Latest Videos

undefined

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எழுதிய பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திமுகவின் கடைசி வெற்றி :

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், ‘சொல்வதை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளார்கள். அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளது. காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர்.  திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றிதான் என்றும் திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு :

திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் என்று கூறினால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.  பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது. ரஷ்யாவிலிருந்து குருடாயில் இந்தியாவிற்கு வரும் பொழுது பெட்ரோல் விலை குறையும். சூழலின் காரணத்தால் உயர்ந்து கொண்டே வருகின்ற சூழலை இனி குறைந்து கொண்டே வரும் சூழலை உருவாக்குவோம்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : பாலியல் தொல்லை.. ரஷிய வீரர்களிடம் இருந்து தப்பிக்க ‘முடியை’ வெட்டும் பெண்கள்.. அதிர்ச்சி சம்பவம் !

click me!