அவிநாசி கோர விபத்து... பெற்ற தாயே தூரம் நின்றும்... முகம் சுளிக்காமல் சிதைந்த உடல்களை அள்ளிய காவலர்..!

Published : Feb 23, 2020, 12:50 PM ISTUpdated : Feb 23, 2020, 12:59 PM IST
அவிநாசி கோர விபத்து... பெற்ற தாயே தூரம் நின்றும்... முகம் சுளிக்காமல் சிதைந்த உடல்களை அள்ளிய காவலர்..!

சுருக்கம்

அவிநாசி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் சிதைந்த உடல்களை ஆயிரம் கண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிதைந்த உடல்களை பார்த்தவர்களும் முகம் சுளித்து ஒதுங்கி நின்ற பொழுது பெற்ற தாயும் சற்றே தூரம்நின்று அழும் நிலையிலிருக்கும் உடலை இந்த தீயணைப்பு வீரர் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் முடியாமலும் அந்த உடல்களை தன் மனம் கோணாமல் முகம் சுளிக்காமல் அள்ளிய போது காவலர்களின் பெருமையையும் அங்கு நின்று பார்த்த மக்கள் உணர்ந்தனர்.

பெற்ற தாயும் சற்றே தூரம்நின்று அழும் நிலையிலிருக்கும் உடலை முகம் சுளிக்காமல் அள்ளிய போது காவலர்களின் பெருமையையும் அங்கு நின்று பார்த்த பொதுமக்கள் உணர்ந்தனர்.

கடந்த வியாழக்கிழமை அன்று பெங்களூருவில் இருந்து கொச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த கேரள அரசு பேருந்தும், சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 21 பயணிகள் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். 

சரியாக அதிகாலையில் நடந்த இந்த விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள், காவல் துறையினரும் மீட்பு பணியை மேற்கொண்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி இருந்ததால் அப்போது பொதுமக்கள் தரப்பில் இருந்து ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்ட வசந்த் சரவணனை குறித்து முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளர்.

அதில், அவிநாசி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் சிதைந்த உடல்களை ஆயிரம் கண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிதைந்த உடல்களை பார்த்தவர்களும் முகம் சுளித்து ஒதுங்கி நின்ற பொழுது பெற்ற தாயும் சற்றே தூரம்நின்று அழும் நிலையிலிருக்கும் உடலை இந்த தீயணைப்பு வீரர் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் முடியாமலும் அந்த உடல்களை தன் மனம் கோணாமல் முகம் சுளிக்காமல் அள்ளிய போது காவலர்களின் பெருமையையும் அங்கு நின்று பார்த்த மக்கள் உணர்ந்தனர். சிதைந்த உடல்களை ஒன்றுதிரட்டி காட்டியே தன் கடமையை செய்தனர் வீரர்கள் வார்த்தைகள் போதாது கடமை என்ற ஒரு வார்த்தைக்காக மக்களின் சேவைக்காகவும் செய்கிறோம்.

இந்த செயல் செய்யும் பொழுது உங்கள் மனம் எப்படி இருந்தது கேட்டபொழுது அவர் சொன்ன வார்த்தை மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று தான் வருத்தப்பட்டார். அது மட்டும்தான் எங்களுக்கு மன வருத்தத்தை தருகிறது என்றார். என் உடையில் இருக்கும் ரத்தம் காப்பாற்ற நினைத்த உயிர்களின் ரத்தம். என்றும் எம் மக்களுக்காகப் பணி செய்ய காத்து கிடப்போம் காவல் துறையும் தீயணைப்பு துறையும் ஒன்று சேர்ந்து இந்த சேவையை செய்தோம் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?