Noyal Trust Meeting | ஈஷாவில் நொய்யல் அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம்

By Dinesh TG  |  First Published Dec 20, 2023, 2:57 PM IST

கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமான நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டுவது தொடர்பான மாதந்திர ஆலோசனை கூட்டம் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது.
 


நொய்யல் ஆறு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்திற்கு பேரூர் ஆதினம் தவத்திரு மருத்தால அடிக்களார் தலைமை தாங்கினார். சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சிறு துளி அறக்கட்டளையின் தலைவர் திருமதி. வனிதா மோகன், சின்மயா மிஷன் திரு. அஜய் சைதன்யா, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தைச் சேர்ந்த சுவாமி வேதானந்தா, ஈஷா அவுட்ரீச் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் பிரதிநிதி திரு. வள்ளுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நொய்யல் நதியில் நிரந்திர நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது, நதியில் கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துரையாடினர். நதியின் நீர் ஆதாரத்தை உறுதி செய்வதற்கு நொய்யல் நதிப் படுகையில், அதாவது நதி பாயும் 4 மாவட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறது. இப்பகுதியில் இதுவரை, காவேரி கூக்குரல் இயக்கம், 10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களுடைய நிலங்களில் நடவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!