டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையோ, பணிச்சுமையோ காரணம் இல்லை என்று ஏடிஜிபி அருண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியல் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், குடும்ப பிரச்சனையோ, பணி சுமையோ தற்கொலைக்கு காரணம் இல்லை. அவர் ஒசிடி என்ற மன அழுத்த பிரச்சனையில் இருந்தார்.
undefined
அதற்காக மருத்துவர்களிடம் சென்று மருந்துகளை எடுத்து வந்தார். கோவையைச் சேர்ந்த ஐஜி, எஸ்.பி போன்ற அதிகாரிகளிடம் விஜயகுமார் சிகிச்சைக்காக ஆலோசித்து உள்ளார். விஜயகுமார் உயிரிழப்பை அரசியல் ஆக்க வேண்டாம். தனிபட்ட நபருக்கான பிரச்சனையில் தற்கொலை செய்துள்ளார்.
வளைகாப்பு கொண்டாடிவிட்டு வெளியில் சென்ற கர்ப்பிணி, கணவன் பலி; உறவினர்கள் கதறல்
ஆனால், பாதுகாவலர் ஏன் துப்பாக்கி கொடுத்தார் என்று விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக பின்னர் விளக்கம் அளிக்கப்படும். விஜயகுமார் மன அழுத்த்ததில் இருந்த காரணத்தினால் தான் , குடும்பத்தினர் அண்மையில் விஜயகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர். காவல்துறை மட்டுமல்ல மற்ற பணிகளிலும் இருக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவை டிஐஜி தற்கொலையை எளிதாகக் கடந்து செல்ல முடியாது.! பின்னனி என்ன.? விசாரணை நடத்திடுக- அண்ணாமலை
விஜயகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனியில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகுமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.