உல்லாசமாக இருந்ததாக பெண் புகார்... முகிலன் கற்பழிப்பு வழக்கில் அதிரடி கைது..!

By vinoth kumarFirst Published Jul 7, 2019, 6:12 PM IST
Highlights

கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் 140 தலைமறைவாக இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் 140 தலைமறைவாக இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தை  சேர்ந்த முருகேசன்  என்பவரின் மகள் ராஜேஸ்வரி (37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில் முகிலன் செய்து வந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில்  நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27-ந் தேதி  நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் இருவரும் தங்கினோம். அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். இதுபோன்று பலமுறை என்னை பல வந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் மற்றும் போலீசார் முகிலன் மீது 417 (திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். இந்த வழக்கிலும் முகிலனை குளித்தலை போலீசார் தேடி வந்தனர். 

இந்த நிலையில் 140 நாட்கள் மாயமான முகிலனை திருப்பதியில் இருந்து அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் அளித்த புகாரில், வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!