நாட்டின் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' என்ற பெயரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ரயில்கள் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது.
பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ள 5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று தொடங்கியது.
நாட்டின் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' என்ற பெயரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ரயில்கள் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக வந்தே பாரத் பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க;- அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா? திமுகவுக்கு எதிராக சீறிய சி.வி. சண்முகம்..!
undefined
இந்நிலையில், சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் 5வது வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு சென்று மைசூரை அடையும். இதற்கான சோதனை ஓட்டத்தை சென்னை சென்ட்ரலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் மைசூரு வரை சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்ப உள்ளது. 5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார். இதன் மூலமாக சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க;- நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..