வண்டலுார் உயிரியல் பூங்காவில் மாணவர்களுக்கு சம்மர் கேம்ப் திட்டம்

By SG Balan  |  First Published Apr 10, 2023, 8:17 AM IST

ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 3 நாட்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்க்கலாம்.


வனவிலங்குகள், அதன் பண்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா என அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கோடைக்கால முகாம் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 12 முதல் மே 7 வரை நடத்தப்படும் இந்த கோடைகால முகாமில் 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் இதில் பங்கெடுக்கலாம்.

விலங்கினங்கள், தாவர வகைகள், சிறிய மாமிச உண்ணிகள், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் ஊர்வன பற்றி உயிரியல் பூங்காவில் உள்ள வல்லுநர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் கற்பிப்பார்கள். பூங்காவில் உள்ள கல்வியாளர் பங்கேற்பாளர்களுக்கு பட்டாம்பூச்சிகளுக்கும் தாவர-விலங்குகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி எடுத்துரைப்பார். வண்டலூர் உயிரியல் பூங்காவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன: புள்ளிவிவரங்களை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இந்த கோடைகால முகாமுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் https://aazp.in/summercamp2023 என்ற இணையதளத்துக்குச் சென்று, வண்டலூர் உயிரியல் பூங்காவின் சம்மர் கேப் திட்டத்திற்கு பதிவு செய்யலாம். மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உயிரியல் பூங்கா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த கோடைகால திட்டத்தை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை நான்கு பிரிவுகளாக நடத்துகிறது. இதில் முதல் முகாம் ஏப்ரல் 12 முதல் 14 வரை நடைபெறும். இரண்டாவது முகாம் ஏப்ரல் 19 முதல் 21 வரையிலும், மூன்றாவது முகாம் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் நடக்கும். நான்காவது மற்றும் கடைசித் முகாம் மே 5 முதல் 7 வரை நடைபெறும்.

நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்

இந்த கோடைகால முகாமல் பங்கேற்பதற்கான கட்டணம் ரூ.800. இதில் பதிவுக் கட்டணம் ரூ.100. முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பை, தொப்பி, எழுது பொருட்கள் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா பற்றிய புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பின் விலை ரூ.700 ஆகும். இதுமட்டுமின்றி முகாமில் கலந்துகொள்பவர்கள் ஓராண்டு காலத்திற்கு 10 முறை பூங்காவை இலவசமாகச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கும் சிறப்பு பாஸ்போர்ட் கொடுக்கப்படும்.

சென்னை டூ புதுச்சேரி 'பீர் பஸ்' சுற்றுலா! கோடையைக் கொண்டாட புது ரூட்!

click me!