நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்
நிலுவையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 67,000 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 67,200 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மற்ற அனைத்து மாநிலங்களைவிட மிக அதிகமாக உள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் இது கிட்டத்தட்ட 28% ஆகும்.
மகாராஷ்டிராவில் 33,000 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் 22,100 வழக்குகளும்; பீகாரில் 16,000 வழக்குகளும்; ஒடிசாவில் 12,000 வழக்குகளும்; தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தலா 10,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தலைநகர் டெல்லி (9,108 ), ராஜஸ்தான் (8,921), அசாம் (6,875), ஹரியானா (4,688) மற்றும் ஜார்கண்ட் (4,408) ஆகியவை அதிக போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள முதல் 13 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன: புள்ளிவிவரங்களை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தையை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து மேலும் துன்புறுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றங்களில் (FTC) அனைத்து விசாரணைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு நீதிமன்றம் இருந்தாலும், ஒரு வருடத்திற்குள் விசாரணையை முடிக்கப்பட வேண்டும் என்று இருந்தபோதிலும், நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 2016 முதல் 170% அதிகரித்துள்ளது. டிசம்பர் 2016 நிலவரப்படி 90,205 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஜனவரி 2023 ல் 2,43,237 வழக்குகளாக அதிகரித்துள்ளது.
Exclusive: ராகுல்காந்தியின் வெளிநாட்டு தொடர்பு! அம்பலப்படுத்தும் குலாம் நபி ஆசாத்!
"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு, குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2018, பிரிவுகள் 173(1A) மற்றும் பிரிவு 309 இன் படி காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு தலா இரண்டு மாத கால அவகாசம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மத்திய நிதியுதவியுடன் 764 சிறப்பு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 411 சிறப்பு நீதிமன்றங்கள் பிரத்யேகமாக போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கின்றன. இந்த நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 1.4 லட்சம் வழக்குகளைத் தீர்த்து வருகின்றன.
ராஜஸ்தானில் பயங்கரம்: பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து தீ வைத்துக் கொலை