வெளுத்து வாங்கும் கனமழை.. எங்கும் பார்த்தாலும் வெள்ளக்காடு.. சென்னையில் அனைத்து கவர்மெண்ட் ஆபீசுக்கும் லீவு.!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 10:42 AM IST
Highlights

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக  சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுலதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 26ம் தேதியன்று தொடங்கியது. அப்போது முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடியவிடிய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னையில் ஒரே நாள் இரவில் சுமார் 25 செ.மீ. மழை பதிவானது. இதனால், சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

இதையும் படிங்க;- மக்கள் தங்குவதற்கு பள்ளிகளை திறந்து வையுங்கள்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

இதனால், முக்கிய சாலைகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில், இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சென்றவர் சென்னை திரும்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சிக்கலில் எஸ்.பி. வேலுமணி..!

இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- நான் தான் ஜெயலலிதா பெத்த பொண்ணு.. விரைவில் சின்னமாவை சந்திப்பேன்.. பகீர் கிளப்பும் சென்னை பெண்..!

மழை பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் இல்லையே வாய்ப்பிருந்தால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!