14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 24 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை.. உச்சக்கட்ட உஷாரில் தமிழகம்.!

By manimegalai aFirst Published Nov 8, 2021, 9:28 AM IST
Highlights

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். 
 

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வட கிழக்கும் பருவ மழை தீவிடமடைந்துள்ளது. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ. அளவுக்கு நேற்று மழை பெய்ததால், சென்னை நகரமே வெள்ளக் காடாயினது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் வடக்கு, மத்திய, தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். 

மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர் விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும் மழை காரணமாகவும் சிவகங்கை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, சேலம், திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல கொடைக்கானல் பள்ளிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அறிவித்துள்ளார். புதுச்சேரி, காரைக்காலிலும் இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!