கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு! இதோ ஆதாரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

Published : Jun 13, 2025, 08:25 PM IST
mk stalin

சுருக்கம்

கீழடிக்கு அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

MK Stalin Condemns Central Government for Rejecting Keezhadi Excavations: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நாகரீகம் கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய நிலையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் ஆய்வறிக்கை சர்ப்பித்தார். ஆனால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய தொல்லியல் துறை இந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது.

கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு

இதற்கு தமிழ்நாட்டில் கண்டங்கள் எழுந்த நிலையில், ''கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அதனை அங்கீகரிக்க முடியும்'' என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார். தமிழர்களின் வரலாற்றை புறம்தள்ளும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

இந்நிலையில், கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், AMS அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவைஎன்கிறார்கள் அவர்கள்! இதோ சான்று!

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள்

இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பா.ஜ.க. ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால் நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள்.

எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்குகிறது

கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல; கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் ஸ்க்ரிப்ட்க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட'' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன் கீழடி தொடர்பான ஆதாரங்களையும் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!