அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ரயில் சேவை நாடு முழுவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்ததால் 20 சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புறநகர் ரயில் சேவையை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்ட சோதனைக்குப் பிறகே ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவர். துறை சார்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்.
மேலும், சிறப்பு அனுமதி அட்டை பெற்றுள்ளவர்களே ரயிலில் பயணிக்க முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். ரயில் பயணிகள் முகக்கவசம் உட்பட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.